தனியார் மின்னுற்பத்தி நிலையத்திடமிருந்து 23MW மின்சாரம் கொள்வனவு

மின்சார நெருக்கடியை தீர்க்கும் வகையில் மாத்தறை ஏஸ் பவர் (Ace Power) தனியார் மின்னுற்பத்தி நிலையத்திடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.இதன்மூலம் 23 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

தென் மாகாணத்திற்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்கும் நோக்கில் மாத்தறை ஏஸ் பவர் (Ace Power) தனியார் நிறுவனத்திடமிருந்து அவசர கொடுக்கல் வாங்கலின் அடிப்படையில் மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டதாகவும், இதற்கு மேலதிகமாக எம்பிலிபிட்டிய ஏஸ் பவர் (Ace Power) தனியார் நிறுவனத்திடமிருந்தும் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, சமனல வாவியிலிருந்து இன்று (23) மாத்திரமே மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.