மேலும் 6 இலட்சம் பயனாளிகளுக்கான கொடுப்பனவு

TestingRikas
By -
0
மேலும் 6 இலட்சம் பயனாளிகளுக்கான கொடுப்பனவு

அஸ்வெசும திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மேலும் சில பயனாளர்களுக்கான கொடுப்பனவுகள்,

நாளை (01) முதல் வங்கிகளுக்கு விடுவிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

சுமார் 06 இலட்சம் பயனாளிகளுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்மசிறி குறிப்பிட்டார்.

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்மசிறி குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)