யாழில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு

யாழில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு

27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தொகையொன்று வடக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, ​​கடலில் மிதந்த பொதிகளில் கேரள கஞ்சா இருந்தமையை கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

22 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா தொகை 80 கிலோவுக்கும் அதிகம் என எடை மதிப்பிடப்பட்டுள்ளது.


மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை குறித்த கஞ்சா தொகை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்