சுற்றுலாப் பயணிகளின் வருகை 900,000ஐ எட்டவுள்ளது!
இந்த வருடம் இலங்கைக்கு வருகை தந்த மொத்த வெளிநாட்டு பிரஜைகளின் எண்ணிக்கை விரைவில் 900,000ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த வருடம் ஆகஸ்ட் 27 ஆம் திகதி வரை 891,198 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டு முழுவதும் இலங்கைக்கு வருகை தந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 719,978 ஆக இருந்தது.
இதற்கிடையில், 2023 இன் முதல் நான்கு மாதங்களில் தலா 100,000 க்கும் அதிகமான பார்வையாளர்கள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக