9 பொருட்களின் விலை  குறைப்பு


நாளை (17) முதல் 9 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.

400 கிராம் LSL பால் மா பாக்கெட்டின் விலை 29 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 970 ரூபாவாகும்.

1 கிலோ சோயாவின் (மொத்த விற்பனை) விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 625 ரூபாவாகும்.

நெத்தலி ஒரு கிலோ விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 1160 ரூபாவாகும்.

இதேவேளை, 1 கிலோ பாஸ்மதி அரிசியின் புதிய விலை 675 ரூபாவாகும், இது 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

பிரவுன் சீனியின் விலை கிலோ ரூ.350 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 325 ரூபாவாகவும், கடலை ஒரு கிலோ 555 ரூபாவாகவும், ஒரு கிலோ வௌ்ளைப்பூடு 630 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ சிவப்பு பச்சை அரிசியின் புதிய விலை 147 ரூபாவாக உள்ளதுடன், அதன் விலையை 2 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.