9 வருடங்களின் பின் பேருவளை மரதானை வீதியூடாக பேருந்து சேவை!!

எதிர்வரும் திங்கட்கிழமை 28 ஆம் திகதி முதல் பாடசாலை நாட்களில் அழுத்கமையில் இருந்து பேருவளை மரதானை வீதியூடாக பேருந்து சேவை அமுல்படுத்தப்படவுள்ளது.

பேருவளை அல் பாசியதுள் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவிகளின் தேவை கருதி பாடசாலை அதிபர் மஸ்னவியா மூஸின்,பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ,வீதி அபிவிருத்தி சங்கம் , பழைய மாணவர் சங்கம் மற்றும் ஊர்வாசிகளின் பலமாத வேண்டுகோளின் பேரில் மேல்மாகாண போக்குவரத்து அதிகாரசபை தலைவர் பிரசன்ன சஞ்சீவ அவர்களின் அனுமதியில் இந்தப் பேருந்து சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இப்பேருந்து சேவையைத் ஆரம்பவிழா எதிர்வரும்  28 ஆம் திகதி அழுத்தகம  பேருந்து நிலையத்தில் காலை 6.30. மணிக்கு நடைபெறவுள்ளது.

9 வருடங்களுக்கு பின் மீண்டும் இப்பேருந்து சேவையை அமுல்படுத்துவதற்கு பாடுபட்ட அனைவருக்கும் பேருவளை நியூஸ் ஊடக நிறுவனத்தின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

பேருந்து நேர அட்டவணை இணைப்பு!!

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.