சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து Alex Hales ஓய்வு

 இங்கிலாந்து அணியின் Alex Hales சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு கிடைத்த வெற்றியுடன் அவர் ஓய்வை அறிவித்துள்ளார்.

லீக் போட்டிகளில் பங்கேற்கும் வகையில், தாம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

75 T20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2000 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

அவர் 70 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன்,  2419 ஓட்டங்களை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.