நானுஓயாவில் கெப்ரக வாகனம் விபத்து - அறுவர் காயம்
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் கிரிமிட்டி பகுதியில் கொழும்பு பிலியந்தலையிலிருந்து நுவரெலியா நகருக்கு பயணித்த கெப் ரக வாகனமொன்று வீதியைவிட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து இன்று முற்பகல் (21) திங்கட்கிழமை விபத்துக்குள்ளாகியதில் 6 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாகனத்தின் வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் போனதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இவ்விபத்துத் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கருத்துகள்
கருத்துரையிடுக