அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு கடும் எதிர்ப்பு

அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிர்காலத்தில் கடுமையான எதிரப்பை வெளியிட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் செப்டெம்பா் மாதம் 14 ஆம் திகதி நாட்டுக்கு வரும்போது எதிர்ப்பு நடவடிக்கைகளை நீவிரப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளாா்.


“எங்களுடன் கைகோர்த்துள்ள அநேகமான தொழிற்சங்கங்களில் தலைமைத்தவ மட்டத்தில் இருக்கும் பிரதிநிதிகள், ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்று கலந்துரையாடலுக்கு நேரமொன்றை ஒதுக்கி கொடுக்குமாறு கோரியிருந்தோம். இருந்தபோதும், தொழில் துறைசார்ந்தவர்களின் பொருமையை தவறாக பயன்படுத்தி எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்காமல் பிரச்சினையை மூடிமறைப்பதற்கு இன்னும் அரசாங்கம் நம்பிக்கையுடன் இருந்தால் அதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். எங்களின் பொருமையை தவறாக பயன்படுத்த ஆட்சியாளர்கள் முயற்சித்தால் அதற்கான தகுந்த பதலடியை வழங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். செப்டெம்பா் 14 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் குழுக்கள் நாட்டுக்கு வரும்போது இந்த எதிர்ப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவோம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டாா்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.