மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் கிரவுண்ட் செம்பியன் விருது வென்ற கஹட்டோவிட்ட இர்ஷாத் ஷெரீப்
*Ground Champion விருது வென்ற இர்ஷாத்*
நேற்றைய தினம் கொழும்பு விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் கஹட்டோவிட்ட இர்ஷாத் ஷரீப் கிரவுண்ட் சாம்பியனாக மகுடம் சூடினார்.
இவர், தான் கலந்து கொண்ட குண்டெறிதல் மற்றும் பரிதி எறிதல் போட்டிகளில் முதலாம் இடத்தையும் சைக்கிளோட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டார்.
தொடர்ச்சியாக 27 வருடங்களாக இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் இவர் ஒவ்வொரு வருடமும் பல வெற்றி விருதுகளை தமதாக்கிக் கொள்வதோடு சென்ற வருடமும் கிரவுண்ட் சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
Sports Information Kahatowita
இவருக்கு சியன நியூஸ் இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக