வைத்தியர்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக சில கட்டுப்பாடுகளின் கீழ் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதி வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, விடுமுறைக்கான காரணம், விடுமுறையில் செல்லும் காலப்பகுதி மற்றும் அவ்வாறு விடுமுறை பெற்ற வைத்தியருக்கான மாற்றீடு என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில துறைகளில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை மற்றும் வெளிநாடுகளுக்கு சென்ற வைத்தியர்கள் மீள நாடு திரும்பாமை உள்ளிட்ட காரணங்களினால் வைத்தியசாலைகள் சிலவற்றின் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ள நிலையில் சுகாதார அமைச்சு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதேநேரம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி ஆகிய தரப்பினருக்கு இடையே அடுத்த வாரம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.