ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

 நாட்டில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது.

 எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த தடை விதிக்கப்படவுள்ளதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

 அதன்படி, பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய், கோப்பைகள், தட்டுகள், கத்திகள், கரண்டிகள், இடியப்ப தட்டுகள், அலங்கார மாலைகள் போன்ற பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை செய்வதற்கு இவ்வாறு தடை விதிக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கருத்துகள்