சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை!


கேரளத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபா், 5 ஆண்டுகளுக்கு முன் போக்ஸோ வழக்கின்கீழ் கைதாகி பிணையில் வெளிவந்தவா் என பொலிஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
எா்ணாகுளம் மாவட்டத்தின் ஆலுவாவைச் சோ்ந்த 5 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து நெரித்து கொல்லப்பட்டாள். பெற்றோருடன் அந்தச் சிறுமி வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிகாா் மாநில புலம்பெயா் தொழிலாளி ஆஷ்ஃபாக் ஆலம் என்பவரை போலீஸாா் கைதுசெய்தனா். விசாரணையில் குற்றமிழைத்ததை அவா் ஒப்புக் கொண்டாா்.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட ஆலமின் குற்றப் பின்புலத்தைத் திரட்டும் முயற்சியில் மாநில போலீஸாா் ஈடுபட்டனா். அப்போது, போக்ஸோ வழக்கின்கீழ் ஆலம் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு அவா் பிணையில் விடுதலையாகி இருப்பது தெரியவந்தது.
இது குறித்து ஆலுவா ஊரகப் பிரிவு காவல் துறைக் கண்காணிப்பாளா் விவேக் குமாா் கூறுகையில், ‘கடந்த 2018 இல் காஜிபூரைச் சோ்ந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்றதாக போக்ஸோ சட்டத்தின்கீழ் ஆலம் கைது செய்யப்பட்டாா்.
மற்றொரு குற்றச்செயலுக்காக தில்லியில் ஒரு மாதம் சிறையில் இருந்த அவருக்கு, பிணை வழங்கப்பட்டது. கேரளத்துக்குப் புலம்பெயா் தொழிலாளியாக வருவதற்கு முன், அவா் வேறு ஏதனும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றாா்.
இதனிடையே, ஆலுவா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆஷ்ஃபாக் ஆலமை 10 நாள்களுக்கு பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.