குளவி தாக்குதலில் பாடசாலை மாணவர் ஒருவர் பரிதாபமாக பலி

 குளவி தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓடிய பாடசாலை மாணவர் ஒருவர் பாறையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

 நுவரெலியா, பம்பரகெலேவத்த பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று (20) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே உயிரிழந்தார்.

 குறித்த மாணவன் மேலும் மூவருடன் குளவி தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓடும் போது பாறையில் இருந்து கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 நுவரெலியா பொலிசார் நுவரெலியா மாநகர தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் கீழே விழுந்த மாணவனை நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

 விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.