நாட்டின் ஸ்தீரனமான செயற்பாடுகள் குறித்து தூதுவர்களுக்கு அமைச்சர் அலிசப்ரி விளக்கம்

கொழும்பில் உள்ள இராஜதந்திரப் பிரதிநிதிகளுக்கு வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை அரசாங்கம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விளக்கமளிக்கும்; நிகழ்வு இன்று காலை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவர்களின் கலந்து விளக்கமளித்த இந் நிகழ்வில் கீழ்வரும் செயற்பாடுகள் விளக்காட்சிகள் மூலம் விரிவாக தெளிவாக்கப்பட்டன:

1. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இலங்கையின் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கண்டுள்ள முன்னேற்றங்களும் அவற்றை கண்டறிவதில் அண்மையில் எதிர்கொண்ட நேர்மறையான சவால்கள்.

2. வெளிநாட்டு இலங்கையர்களுக்கான உத்தேச அலுவலகத்தை (OOSLA) அமைப்பதில் அடைந்துள்ள முன்னேற்றம்.

3. முன்மொழியப்பட்ட திட்டமிடல் பொறிமுறைகளுக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.

4. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் (ONUR) முன்னேற்றம் மற்றும் புதுப்பிப்பு செயன்முறைகள்.

5. பெண்களின் அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயற்றிட்டத்தில் ஜனாதிபதி செயலகத்தினால் அண்மையில் பெறப்பட்ட முன்னேற்ற அடைவுகள்.

நாட்டில் நிலவிய தீவிரமான நெருக்கடியைத் தவிர்ப்பதில் முன்னோக்கி செல்லும் பாதையில் நேர்மறையானவர்களாக இருந்தமையால் கடந்த ஆண்டில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து தூதரகங்களின் பிரதாணிகள் இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டியமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.