பிரமிட் திட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை!

பிரமிட் மோசடி திட்டத்தை செயல்படுத்துபவர்களுக்கும் அதனுடன் தொடர்புடையவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

தெஹியோவிட்ட பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிரமிட் திட்டம் ஒரு வியாபார முறையல்ல என்றும் அது குற்றச் செயல் என்றும் அமைச்சர்  வலியுறுத்தியுள்ளார்.

1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் படி,  மத்திய வங்கியால் இந்த பிரமிட் திட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே குற்றவியல் சட்டம் இந்த பிரமிட் திட்டத்தை பாதிக்கிறது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.