நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த ஐக்கிய அரபு அமீரகம்
நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடுகிறது.
துபாயில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலை பெற்றிருந்தது
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது T20 போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற யுஏஇ அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக மார்க் சாப்மன் 63 ஓட்டங்களை எடுத்தார். பவுன்ஸ், நீஷம் ஆகியோர் தலா 21 ஓட்டங்களை எடுத்தனர்.
யுஏஇ அணி சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஆயன் கான் 3 விக்கெட்டுகளும், ஜவாதுல்லா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.ஏ.இ. அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் அயனாஷ் ஷர்மா டக் அவுட்டானார். அணித் தலைவர் முகமது வசீம் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 55 ஓட்டங்களை சேர்த்தார். ஆசிப் கான் 29 பந்தில் 48 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், யு.ஏ.இ. அணி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதனால் T20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கிறது.
போட்டியின் நாயகனாக 3 விக்கெட் வீழ்த்திய ஆயான் அப்சல் கான் தெரிவு செய்யப்பட்டார்.
கருத்துகள்
கருத்துரையிடுக