பொதுமக்களுக்கு சுங்கத் திணைக்களத்தின் அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிறுவனம் அல்லது அது தொடர்பான தகவல்களைப் பயன்படுத்தி நிதி மோசடிகள் அதிகரித்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

சுங்க திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் நிறுவன அதிகாரிகளின் பெயர்கள் போன்ற பதிவுகளை மோசடி செய்பவர்கள் பயன்படுத்துவதாக சுங்க பணிப்பாளர் சுதத் சில்வா தெரிவித்துள்ளார்.

இனந்தெரியாத நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றுவதைத் தவிர்க்குமாறு இலங்கை சுங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான மோசடி செய்பவர்கள் தொடர்பில் உடனடியாக அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு சுங்கப் பணிப்பாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.