காலி முகத்திடலில் உணவு விற்பனை செய்பவர்களுக்கு ( இளநீர் விற்பனையாளர்கள் உள்ளிட்ட) அடையாள அட்டை.

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள உணவு விற்பனையாளர்களை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனூடாக பதிவு செய்யப்பட்ட உணவு விநியோகஸ்தர் எனும் அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளநீர் விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான உணவுப் பொருட்களையும் விற்பனை செய்வோரை அடையாளங்கண்டு, அவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என கொழும்பு நகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.