வைத்தியசாலைகளில் நாளை அடையாள வேலைநிறுத்தம்
ஆய்வுக்கூட வைத்திய சேவையுடன் தொடர்புடைய ஐந்து தொழில் பிரிவுகளைச் சேர்ந்த சுகாதார பணியாளர்கள் நாளை (24) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனா்.
ஏழு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக கதிரியக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளாா்.
இதன் காரணமாக நாளை சி.டி. பரிசோதனை, எக்ஸ் ரே பரிசோதனைகள், எம்.ஆர்.ஐ. பரிசோதனை, சகல இரசாயன பரிசோதனைகள் முடங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக