பாடசாலை செல்லாத மாணவர்களின் பெற்றோருக்கு சிறை தண்டனை - சவுதி அரேபிய அரசு உத்தரவு !

சவுதி அரேபியாவில், மாணவர் ஒருவர் பாடசாலைக்கு எந்த காரணமும் இல்லாமல் 20 நாட்கள் வராமல் இருந்தால் அவரது பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு மாணவர் 3 நாட்கள் விடுமுறை எடுத்தால் முதல் எச்சரிக்கையும் 5 நாட்கள் விடுமுறை எடுத்தால் 2-வது எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு பெற்றோருக்கு தெரியப்படுத்தப்படும். 

10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 3-வது எச்சரிக்கை அளித்து பெற்றோர் வரவழைக்கப்பட்டு உறுதி மொழியில் கையெழுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு வரவில்லையென்றால் அந்தமாணவர் கல்வித்துறை மூலம் வேறு பாடசாலைக்கு மாற்றப்படுவார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.