சிலாபம் – நீர்கொழும்பு தனியார் பஸ் வேலைநிறுத்தம் நிறைவுக்கு
சிலாபம் – நீர்கொழும்பு பஸ் போக்குவரத்து வழித்தட இலக்கம் 907 தனியார் பஸ் ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டுவர சிலாபம் பயணிகள் போக்குவரத்து நிறுவனம் தீர்மானித்துள்ளது.
குறித்த பாதையில் பயணித்த பஸ் சாரதியை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தனியார் பஸ் ஊழியர் ஒருவரை பொலிஸார் கைது செய்தமை நியாயமற்றது எனக் கூறி நேற்று (30) பஸ் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக