இலங்கையில் மீண்டும் மின்வெட்டுக்கான அபாயம்! வெளிவந்துள்ள தகவல்நாட்டில் வறட்சியான காலநிலை நிலவுவதால் நீர்மின் உற்பத்தி கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளதுடன், மின் உற்பத்திச் செலவு அதிகரிப்பினால் மீண்டும் மின்வெட்டுக்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் மாத தொடக்கத்தில் போதிய மழை பெய்யாவிட்டால் மின் உற்பத்தி நெருக்கடிக்கு உள்ளாகும் என இலங்கை மின்சாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய வறண்ட காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால் நீர் மின் உற்பத்தித் திறன் தேசியத் தேவையில் 15 வீதமாகக் குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.