வீதியில் நடுவே பழுதாகி நின்ற எரிபொருள்  லொறியால் போக்குவரத்து பாதிப்பு

நுவரெலியா பிரதான நகருக்கு லாப் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி வந்த லொறி நுவரெலியா பொரலாந்தையில் உள்ள களஞ்சியசாலைக்கு செல்லும் நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் லொறியில் இயந்திரப்பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக லொறி பழுதடைந்ததை அடுத்து பயணத்தை தொடர முடியாது குறித்த இடத்திலேயே நிறுத்தப்பட்டது .

இதனால் இவ் பிரதான வீதியில்  வந்த வாகனங்கள் இருபுறங்களிலும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து லொறி பழுது பார்ப்பவர்கள்  வரவழைக்கப்பட்டு லொறியை சரி செய்து வீதியோரம்  நிறுத்தினர் பின்னர் நுவரெலியா போக்குவரத்து பொலிஸாரின் உதவியுடன் போக்குவரத்தை சீர் செய்தனர் .

வி.தீபன்ராஜ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.