இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், பங்களாதேஷிடம் இருந்து பெற்றுக்கொண்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் 50 மில்லியன் அமெரிக்க டொலரை மீள செலுத்தியுள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையினால் மீள செலுத்தப்பட்ட தொகையானது கடந்த 17ஆம் திகதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பங்களாதேஷ் மத்திய வங்கியின் பேச்சாளரை மேற்கோள் காட்டி, டாக்கா ட்ரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.

நாணய மாற்று வசதியின் கீழ் பங்களாதேக்ஷிடம் இருந்து பெற்றுக்கொண்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் முதல் தவணையாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை மீள செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இரண்டாம் தவணையாக 100 மில்லியன் அமெரிக்க டொலரையும், மூன்றாம் கட்டமாக 50 மில்லியன் அமெரிக்க டொலரையும் செலுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், அதற்கான கால எல்லை தொடர்பில், அவர் வெளிப்படுத்தவில்லை.
இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற்றிருந்தது.
அதனை மீள செலுத்துவதற்கான கால அவகாசம் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது.

எனினும், இருவேறு சந்தர்ப்பங்களில் கடனை செலுத்துவதற்கான அவகாசம் நீடிக்கப்பட்டிருந்தது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.