அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை
தற்போது நிலவும் வரட்சி காரணமாக எதிர்காலத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இம்மாதப் பருவத்தில் 35000 ஹெக்டேயர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 100000 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ள போதிலும் அவ்வாறான அரிசி தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சி வயல்களில் ஆரம்ப கால நெல் அறுவடையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக