மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு


மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவௌ, கல்லோயா பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தனிப்பட்ட தகராறு காரணமாக மாமானாரால் மருமகன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்த துப்பாக்கிச் சூடு நேற்று (27) இரவு இடம் பெற்றுள்ளதுடன், காயமடைந்த நபர் மின்னேரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


ரொட்டவௌ, கல்ஓயா பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.


துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


சந்தேகநபர் இன்று (27) ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.