விஞ்ஞானப் பாடம் மாத்திரமன்றி அனைத்துப் பாடப்பிரிவுகளையும் பயின்ற மாணவர்களுக்கு தாதியர் தொழிலைத் திறக்க உத்தேசம்!


தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டம் (NMRA) மற்றும் இலங்கை மருத்துவ சபை சட்டம் (SLMC) முற்றாக நீக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையில் மிகவும் திறந்த மற்றும் நியாயமான சந்தைக்கு இடம் வழங்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஞ்ஞானப் பாடம் மாத்திரமன்றி அனைத்துப் பாடப்பிரிவுகளையும் பயின்ற மாணவர்களுக்கு தாதியர் தொழிலைத் திறக்க உத்தேசித்துள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் மருந்துகளை பரிசோதிப்பதற்காக 'பெஞ்ச்மார்க் 4' எனப்படும் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நவீன ஆய்வுகூட வசதிகளை, இலங்கையில் நிறுவுவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதலை எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.