பலஸ்தீன ஒற்றுமைக்கான இலங்கைக் குழுவுடனான சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

பலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் நிலைமைகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்றியிடம் விளக்கி கூறியதுடன், அந் நாட்டின் சீரற்ற நிலைமையையும் சுட்டிக் காட்டினார்கள். 

பலஸ்தீன மக்கள் தினம்தோறும் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் இக் கலந்துரையாடலில் அலசப்பட்டது.

மேலும் இக் கலந்துரையாடலின் போது பலஸ்தீன மக்களுக்கான சுயாதீன உரிமையின் அடிப்படைக் கொள்கைக்கான இலங்கையின் உறுதியான உறுதிப்பாட்டை அமைச்சர் அலிசப்றி அவ்விடத்தில்  வலியுறுத்தியோடு; ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு அமைவாக இரு நாடுகளின் கட்டமைப்பின் ஊடாக விரைவான தீர்மானத்தின் அழுத்தமான தேவையையும்  வலியுறுத்தப்படும் என அமைச்சர் உறுதி தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது. 

(ஊடகப் பிரிவு)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.