➡️ மினுவாங்கொடை, பன்சில்கொட பாலத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்யாமை மற்றும் தற்காலிக வீதியை பராமரிக்காதமை தொடர்பில் அமைச்சர் பிரசன்ன வீதி அபிவிருத்தி அதிகாரசபை மீது விமர்சனம்...

➡️ மேற்படி திட்டம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை கோரப்படும்...

➡️ வீதி அபிவிருத்தி அதிகாரசபை மினுவாங்கொடையில் எந்தவொரு திட்டத்தையும் பூர்த்தி செய்யவில்லை...

➡️ பழைய பாலத்தின் இரும்பு பகுதிக்கு ஒன்றும் ஆகவில்லை...

  -அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

மினுவாங்கொடை, பன்சில்கொட பாலம் கட்டி முடிக்கப்படாமை மற்றும் அது தொடர்பான தற்காலிக வீதியை உரிய முறையில் பராமரிக்காததற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மீது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (24) மினுவாங்கொடை பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவில் கடுமையாக குற்றம் சுமத்தினார்.

இத்திட்டம் தொடர்பான முழுமையான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் தனக்கு வழங்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

மினுவாங்கொடை பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் பூர்த்தி செய்யவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மினுவாங்கொடை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சர் தலைமையில் மினுவாங்கொடை பிரதேச செயலகத்தில் இன்று (24) நடைபெற்றது.

அங்கு அமைச்சர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரியுடன் நடைபெற்ற உரையாடல் பின்வருமாறு:
அமைச்சர் - இதுபற்றி கடந்த மே மாதம் பேசினோம். இது இன்னும் நடக்கவில்லை. இதை விரைவாகச் செய்யுங்கள். பாலத்தை அகற்றியதும் மாற்று வீதி அமைக்க வேண்டும். இங்கு ஒரு குழந்தையும் விழுந்தது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை - இது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதியல்ல.

அமைச்சர்- இதை மாற்று நிறுவனத்திற்கு கொடுக்க முடியாதா?

வீதி அபிவிருத்தி அதிகாரசபை - அதனை எமது மட்டத்தில் செய்ய முடியாது. இது மேலே இருந்து செய்யப்பட வேண்டும்.

அமைச்சர்- உங்கள் உயர் அதிகாரிகளிடம் பேசி எமக்கு அறிக்கை கொடுங்கள்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை - இது இராஜாங்க அமைச்சினால் செய்யப்பட வேண்டும்.

அமைச்சர்- இது மிகவும் பயங்கரமான இடம். இராஜாங்க அமைச்சு என்ன? நீங்கள் என்ன? பாலம் கட்டும் வரை மாற்று வீதி அமைக்கவும். நான் நகரசபையிலும் கூறுவேன்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை- ஐயா, இது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதியல்ல.

அமைச்சர்- அப்படியானால் மாற்று வழி சொல்லுங்கள். நீங்கள் தான் அதிகாரிகள். நாங்கள் அல்ல. நகர சபைக்கு அதிக செலவு செய்வது கடினம்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை- இந்தப் பாலத்தின் வேலை வேறு நிறுவனங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது. எனவே, இது எங்களுக்குரிய தொழில் அல்ல.

அமைச்சர்- நீங்கள் தான் அங்குள்ள பாலத்தை அகற்றினீர்கள். அப்படியானால் அங்கு மாற்று ஏற்பாடு செய்வது உங்கள் பொறுப்பு. இது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானதா இல்லையா என்பது வேறு கதை.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை - இது இராஜாங்க அமைச்சுக்கு சொந்தமானது.

அமைச்சர்- அந்தக் கதைகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இது இராஜாங்க அமைச்சாக இருந்தாலும், நெடுஞ்சாலை அமைச்சின் கீழ் செயல்படுகிறது. இதன் கீழ் வீதி அபிவிருத்தி அதிகாரசபை உள்ளது. உங்களுக்குள்ளேயே பேசி இதற்கு மாற்று வழி கூறுங்கள்.

மினுவாங்கொடை  நகர சபையின் முன்னாள் தலைவர் நீல் ஜயசேகர - அங்கிருந்த இரும்புக்கு ஒன்றும் ஆகவில்லை. நகர சபை தலைவர் எடுத்ததாக சிலர் கூறுகின்றனர். உள்ளூராட்சி மன்றத் தலைவர் எடுத்ததாக வேறு சிலர் கூறுகின்றனர். அமைச்சரின் உதவியாளர்கள் எடுத்ததாக வேறு சிலர் சொல்கிறார்கள். இரும்புக்கு உண்மையில் எதுவும் நடக்கவில்லை. இந்த சமூக ஊடகங்களால் நாங்கள் தாக்கப்படுகிறோம்.

அமைச்சர்-இதைச் செய்தது யார் என்று சொல்லுங்கள். அதிகாரிகள் செய்யும் வேலைகளால் திட்டுவதும், வீடுகளுக்கு தீ வைக்கப்படுவதும் எங்களுக்குத்தான். சரியென்றால் அந்த விஷயங்களை உங்களுக்குத்தான் செய்ய வேண்டும்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை - அந்த பணிகளுக்கும் எமக்கும் தொடர்பில்லை அமைச்சரே.

அமைச்சர்- இந்த பணியை நெடுஞ்சாலை அமைச்சு தான் செய்தது. நீங்கள் இல்லையென்றால் யார் செய்தது? அடுத்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் அமைச்சை தொடர்பு கொள்ளவும். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் இது குறித்து உரையாடப்படும். அதற்கும் அவர்களை வரச் சொல்லுங்கள். அவர்கள் பெரிய மதிப்பீடுகளை செய்கிறார்கள். செலவு மட்டுமே. ஊர் மக்கள் ஒன்றாகச் சேர்ந்தால் தற்காலிகமாக ஏதாவது செய்யலாம்.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எடுக்க ஒன்றும் இல்லை. செய்த அனைத்து வேலைகளையும் பாதியில் நிறுத்தினர். இதில் நெடுஞ்சாலை அமைச்சு தலையிட வேண்டும். பெரிய செலவில்லாமல் தற்காலிகமாக ஒன்றை உருவாக் குமாறு நான் கூறுகிறேன்.

இந்நிகழ்வில் மினுவாங்கொடை பிரதேச செயலாளர் திருமதி யு.டபிள்யூ.டி.யு.ராஜகருணா மற்றும் அரச அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.


முனீரா அபூபக்கர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.