கோதுமை மாவின் விலை அதிகரிப்பு?

இந்தியாவில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரிய போதிலும், அதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

கோதுமை மா இறக்குமதிக்கு உரிமம் தேவை எனக் கூறி, கடந்த ஜூலை 14ஆம் திகதி முதல் இந்தியாவில் இருந்து கோதுமை மா இறக்குமதியை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் இடைநிறுத்தியுள்ளதாகவும், இதனால் கோதுமை மாவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலைமையினால் எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு அல்லது கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.