ஹரின், மனுஷ மீதான தடையை நீக்கியது ஐ.தே.க

 ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார மீது விதித்த தடையை நீக்க  ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (02) மாலை நடைபெற்றது.

ஹரின் பெர்னாண்டோவும் மனுஷ நாணயக்காரவும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு கட்சியின் செயற்குழுவினால் தடை விதிக்கப்பட்டது.

எனினும், இருவரும் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டதையடுத்து, அந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பேச்சாளர் கூறினார்.

இதேவேளை, ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.