ஆப்கான் தேசிய பூங்காவிற்கு செல்ல பெண்களுக்கு தடை!


ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பு ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

குறிப்பாக பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுவதுடன், பொதுவெளியில் அவர்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடுமையாக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானின் மிகவும் பிரபலமான பாமியன் மாகாணத்தில் உள்ள பேண்ட்-இ-அமிர் தேசிய பூங்காவுக்கு செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூங்காவிற்கு செல்லும் போது பெண்கள் ஹிஜாப் அணியும் நடைமுறையை சரியாக கடைப்பிடிப்பதில்லை என அமைச்சர் முகமது காலித் ஹனாபி தெரிவித்துள்ளார். 

சுற்றிப் பார்ப்பது பெண்களுக்கு அவசியமில்லை என்று கூறிய அவர், இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை பெண்கள் அந்த பூங்காவிற்கு செல்வதை தடை செய்யுமாறு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஹிஜாப் அணியாமல் வருவது அல்லது சரியாக அணியாமல் வருவது பற்றிய முறைபாடுகள் உள்ளன, இவர்கள் பாமியான் வாசிகள் அல்ல. அவர்கள் மற்ற இடங்களிலிருந்து இங்கு வருகிறார்கள் என பாமியன் ஷியா உலமா சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். 

சில மாதங்களுக்கு முன்பு, ஹெராத் மாகாணத்தில் தோட்டங்கள் அல்லது பசுமையான இடங்களைக் கொண்ட உணவகங்களுக்குள் குடும்பங்கள் மற்றும் பெண்கள் நுழைவதை அவர்கள் தடை செய்ததாக பாக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.