மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் : இன்றைய வானிலை

இன்றைய வானிலை 
2023.08.28

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா,  காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். 

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.  

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இன்று முதல் செப்டெம்பர் 7ம் திகதி வரையில் வட அரைக்கோளத்தில் இருந்து தென் அரைக்கோளத்திற்கு சூரியனின் நகர்வு காணப்படுகின்றது. இதன்படி இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் கோவிலன் முனை மற்றும் மல்லாகம் போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது. 

கடல் பிராந்தியங்களில் 
****************************
   
கொழும்பு  தொடக்கம் காலி ஊடாக மாத்தறை  வரையான கடல் பிராந்தியங்களின்  பல இடங்களில்  மழை பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

ஹம்பாந்தோட்டை தொடக்கம்  பொத்துவில் வரையான அத்துடன் புத்தளம் தொடக்கம் மன்னார்,காங்கேசன்துறை  ஊடாக திருகோணமலை  வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 - 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாகக் காணப்படும். 

மொஹமட் சாலிஹீன்,  
சிரேஸ்ட  வானிலை அதிகாரி.

கருத்துகள்