மாணவர்களுக்கு பாலியல் கல்வி - வேலைத்திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது!!

முன்பள்ளி முதல் தரம் 13 வரையிலான  மாணவர்களுக்கு  பாலியல் கல்வியை  வழங்கும் வேலைத்திட்டத்தை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர்களுக்கான பாராளுமன்ற மன்றத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த மன்றத்தின் தலைவி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.

இதன்படி, முன்பள்ளிச் சிறார்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் பாலுணர்வு அறிவை வழங்குவதற்காக பதினான்கு புத்தகங்கள் தேசிய கல்வி நிறுவகத்தினால் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களையும் ஒரே நேரத்தில் அச்சிடுவது சிரமமாக இருப்பதால், கூடுதல் வாசிப்பு புத்தகங்கள் மட்டுமே குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.