நாட்டின் சில பகுதிகளில் தற்போது இடைக்கிடையே மழை பெய்தாலும் தமது திணைக்களத்தின் கீழுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு இன்னும் அதிகரிக்கவில்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
73 நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவானது 8 இலட்சம் ஏக்கர் அடியாக காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் பொறியியலாளர் சுதர்ஷனி விதானபத்திரண தெரிவித்துள்ளார்.
இது நீர்த்தேக்கங்களில் இருக்கவேண்டிய நீர் கொள்ளளவில் 27 வீதம் என அவர் கூறியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக