வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்!
வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை வழங்குவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட 55 வயதுடைய வெயங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் போலந்தில் வேலை வாய்ப்பை வழங்குவதாக கூறி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்பணியகத்தில் பதிவு செய்யாமல் கொழும்பு -05 இல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தை நடத்தி வந்து பொது மக்களிடமிருந்து 10 மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
எனவே வெளிநாடு செல்ல காத்திருப்போர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக