பொதுவாகவே நாய்களின் ஆயுட்காலம் 10 முதல் 15 வயது வரை தான். ஆனால் போர்த்துகல் நாட்டை சேர்ந்த பாபி என்ற பெயரிடப்பட்ட நாய் ஒன்று 30 வருடங்கள் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.


இதற்கு முன்பு அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நாய் 29 ஆண்டுகள் மற்றும் 150 நாட்கள் வாழ்ந்தது தான் உலகின் மிக அதிக வயது கொண்ட நாய் என்ற சாதனையை படைத்திருந்தது. 


அந்த சாதனையை பாபி முறியடித்துள்ளது. இந்த நாய் வயது முதிர்வு காரணமாக பார்வை குறைபாடு மற்றும் நடப்பதற்கு சிரமப்பட்டாலும், ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.