மதுபானங்களின் விலையை குறையுங்கள்: டயனா கமகே விடுத்துள்ள கோரிக்கை
நான் ஜனாதிபதியிடமும் இந்த அரசாங்கத்திடம் முன்வைக்கும் கோரிக்கை ஒன்றுதான். தயவு செய்து மதுபானங்களின் விலையைக் குறையுங்கள் என இராஜாங்க அமைச்சரான டயனா கமகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(22.08.2023) சுற்றுலா சட்டத்தின் விதிமுறைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடு தற்போது உள்ள செயற்பாடுகளுடன் செல்லுமாயின் முன்னேறுவது கடினமான விடயமாக மாறிவிடும்.
இப்போது நாட்டில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அவர்களின் வருகை வளர்ச்சியடைந்துள்ளது.
இவற்றை அதிகரிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டுக்குள் வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும், சிகிரியாவுக்கும், மதஸ்த்தலங்களுக்கும் செல்ல விரும்புவதில்லை.
அவர்கள் வருவது பொழுதுபோக்கிற்காக. எனவே அவர்களுக்குச் சிறந்தது இரவு களியாட்டங்களே. தற்போது இரவு 10 மணிக்கு முன்பாகவே மதுபான சாலைகளும், உணவு விடுதிகளும் மூடப்படுகின்றன.
இவ்வாறு செயற்பட்டால் நாட்டை முன்னேற்ற முடியாது.
ஏன் கடற்கரைகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளை 1 மணிக்கு நிறுத்த வேண்டும். இசையால் மீன்களுக்கு எந்தவிட தொந்தரவும் ஏற்படாது.
இவைகளை ஜனாதிபதி கருத்தில் கொள்ள வேண்டும்
கருத்துகள்
கருத்துரையிடுக