நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சிறுவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறுவர்கள் வெளி செயற்பாடுகளில் ஈடுபடும் போது அதிகளவில் வியர்வை வெளியேறுவதால் நீர்ச்சத்து குறைவடையும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக நீர், இளநீர், தேசிக்காய் சாறு, தோடம்பழம், மாதுளம்பழம், ஜீவனி போன்ற நீராகாரங்களை சிறுவர்களுக்கு அதிகமாக வழங்குமாறும் பெற்றோர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.