முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சரும் சமூக சேவையாளருமான மயோன் முஸ்தபாவை இழந்து விட்டோம் 
 
அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களின் இரங்கல் செய்தி 

“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்”

அன்னாரின் ஜனாஸா செய்தி (26) இன்று கேள்விப்பட்டு மிகவும் கவலையடைந்தேன்.

மர்ஹும் மாயோன் முஸ்தபா அவர்கள் எல்லோருடனும் 
பண்பாகவும்,அன்பாகவும்,பழகுபவர்தனது கடமைகளை நிறைவேற்றுவதில் மிகவும்  அர்ப்பணிப்புடனும் பணியாற்றியவர். 

கல்விச் சமூகத்தின் உருவாக்கத்திற்காக குறிப்பாக கணினி கல்வியை கிழக்கு மாகாணத்தில் நிலைநாட்டுவதற்காகவும் அரும்பாடுபட்டுள்ளார் ஓர் உன்னத தூரநோக்கு சிந்தனைமிக்க மனிதராவார்.

தனது ஊரின் அபிவிருத்தி  செயற்படுகளிலும்,ஆன்மீக விடயங்களிலும்  தனது முழுமையான கவனத்தின்பால் கொண்டு பணியாற்றியவர் மேலும் அன்னார் வர்த்தக செயற்பாடுகளிலும் தனக்கென தனி நாமத்தை நிலை நாட்டியவர் அன்னாரின் இழப்பு மிகவும் கவலையளிக்கின்றது.

மர்ஹும் மாயோன் முஸ்தபா அவர்களின் இழப்பு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் பேரிழப்பாகும்.

யா! அல்லாஹ் அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு மன ஆறுதலை கொடுப்பாயாக! அன்னாரின் பாவங்களை மன்னித்து மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கத்தை வழங்குவாயாக என்று பிராத்திக்கின்றேன். ஆமீன்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.