வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் மூலோபாய ஆய்வுகள் தொடர்பான கலந்துரையாடல் லக்ஷ்மன் கதிர்காமர் மூலோபாய கற்கைகளுக்கான நிலையத்தில் நேற்று (08) நடைபெற்றது. 

இக் கலந்துரையாடலில் சிறப்பு அதிதியாக பங்கேற்ற வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்களினால் ஆரம்ப அமர்வில் சிறப்பு உரையும் நிகழ்த்தப்பட்டது. 

இந் நிகழ்வினூடாக வெளியுறவுக் கொள்கைகள், மூலோபாய ஆய்வுகள் மற்றும் சர்வதேச உறவுகளை மையமாகக் கொண்ட ஆராய்ச்சியின் திட்டமிடல்கள், பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடு ஆகியவற்றிற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கவல்லதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பேராசிரியர்கள், புத்திஜீவிகள்,  வெளிநாட்டு முக்கியஸ்ர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(ஊடகப் பிரிவு)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.