வட ஆப்பிரிக்காவில் உள்ள மொரொக்கோ நாட்டில் உள்ள மத்திய மாகாணமான அஜிலாலில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். அஜிலாலில் உள்ள டெம்னேட் நகரில் நடைபெற்ற வாராந்த சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற மினி பஸ் வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணை ஆரம்பித்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக