இலங்கையிலிருந்து ஒல்லாந்தர் கொண்டு சென்ற பண்டைய பொருட்கள் இலங்கைக்கு மீண்டும் கிடைக்கின்றன: - ஒப்பந்தம் கைச்சாத்து


இலங்கையை ஒல்லாந்தர் (தற்போதைய நெதர்லாந்து) ஆட்சி செய்த போது, அவர்கள் இலங்கையிலிருந்து எடுத்துச் சென்ற பண்டைய பொருட்களையும், அவர்கள் இலங்கையில் விட்டுச் சென்ற பொருட்களையும் பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவராலயத்தில் இன்று (29) இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இவ் ஒப்பந்தத்தில் இலங்கையின் சமய மற்றும் பெளத்த கலாச்சார அமைச்சர் விதுர விக்ரமாநாயக்க மற்றும் நெதர்லாந்து நாட்டின் ராஜாங்கச் செயலாளர் கன்னே யுஎஸ்லு ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கன்டி அரும் பொருட்காட்சி சாலைகளில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பண்டைய பொருட்கள் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையிடம் மீள கையளிக்கப்படவுள்ளன.

அதேபோன்று கண்டி அரும்பொருட்காட்சியகங்களில் உள்ள – ஒல்லாந்தர்களுடைய பண்டைய பொருட்கள் அவர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வில் நெதர்லாந்து துாதுவரும் கலந்து கொண்டார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.