போலி வைத்தியர்களினால் ஆபத்து ; அரச வைத்தியர் சங்கம் எச்சரிக்கை

  Fayasa Fasil
By -
0

நாடளாவிய ரீதியில் 40000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் மக்களுக்கு மருந்துகளை வழங்கி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

அவர்கள் தரமான கல்வியைப் பெறவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

 

இதனூடாக மக்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என வைத்தியர் மேலும் குறிப்பிட்டார். 


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)