Nujba foundation இன் ஏற்பாட்டினால் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு




Nujba Foundation இன் ஏற்பாட்டினால் பெண்களின் உடல், உள, சமூகப, பொருளாதார மேம்பாட்டிற்கான வழிகாட்டல் நிகழ்வொன்று கடந்த வெள்ளிக்கிழமையன்று (11.08.2023) கஹடோவிட்ட முஸ்லிம் பாலிகா  வித்தியாலயத்தின்  பிரதான மண்டபத்தில் நடாத்தப்பட்டது. 

       இந்நிகழ்விற்கு சிறப்பு பேச்சாளர்களாக SMILE Sri Lanka அமைப்பின் உறுப்பினர்களான, Psychological Counsellor Ms.Deepthi Pereira அவர்களும் Dr.Priyamali De Silva  அவர்களும் Professional Counsellor Ms.Darshani Weerabahu அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்நிகழ்வில் குடும்பத்தில் பெண்ணொருவரின் வகிபாகங்கள்  என்ற கருப்பொருள் பிரதானமாக கலந்துரையாடப்பட்டது.

இதன் தொடர் நிகழ்வு இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 20.08.2023 மாலை 2.00 முதல் 6.00 வரை இடம் பெறவுள்ளது. இதில் போதைப்பொருளில் இருந்து பிள்ளைகளை பாதுகாக்கும் முறைகளும், ஒரு வியாபாரத்தை சிறிய அளவில் இருந்து ஆரம்பித்து உயர்ந்த அளவிற்கு கொண்டு செல்லும் வழிமுறைகளும் கலந்துரையாடப்படவுள்ளன.

இதில் 18 வயத்திற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியும். 

கருத்துகள்