WWE பிரபல்யம் உயிரிழப்பு....!!!

WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ப்ரே வியாட் என்றே சொல்லலாம். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைலை குழந்தைகள் பார்த்தால் பயப்படுவார்கள். அண்டடெக்கர் போல இருட்டில் எண்ட்ரி கொடுப்பார்

ப்ரே வியாட் WWE மல்யுத்த போட்டிகளில் 2009-ம் ஆண்டு அறிமுகமானார். அவர் பிரபலமானது 2013 ஆம் ஆண்டு தான். வியாட் ஃபேமிலி என பெயரிடப்பட்டு அதில் வில்லனாக தோன்றி தன்னுடைய வித்தியாசமான சண்டை நுணுக்கங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

மூன்று முறை WWE உலக சாம்பியன் பட்டத்தையும் இரண்டு முறை யுனிவர்சல் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி இருக்கிறார்.

ஸ்மாக்டவுன் மற்றும் ரா போன்ற பொழுதுப் போக்கு மல்யுத்த தொடரில் Tag team சாம்பியன் பட்டங்களையும் கைப்பற்றி இருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு WWE வில் இருந்து விலகிய ப்ரே வியாட் மீண்டும் அக்டோபர் மாதம் 2022 ஆம் ஆண்டு திரும்பினார். அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டு சிறிது காலம் ஓய்வில் இருந்த ப்ரே வியாட் மீண்டும் 2023 ஆம் ஆண்டு ராயல் ரம்பிள் தொடரில் பங்கேற்றார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் இன்று தனது 36 வயதில்  அவர் உயிரிழந்ததாக பிரபல முன்னாள் WWE வீரர் டிரிபிள் ஹெச் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புகழ்பெற்ற WWE வீரர் ப்ரே வியாட்டின் தந்தையிடம் இருந்து தற்போது ஒரு அழைப்பு வந்தது. எங்கள் WWE உறுப்பினர் ப்ரே வியாட் நெஞ்சுவலியால் இன்று அதிகாலை உயிரிழந்தார் என்ற சோக செய்தியை எங்களுக்கு அவர் தெரிவித்தார். அவரது குடும்பத்திற்காக நாங்கள் பிராத்தனை செய்கிறோம். அவர் கூறினார்.

இதேவேளை, அவரது மறைவிற்கு WWE அமைப்பு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இரங்களை தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.