மேலும் 05 இலட்சம் பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவு எதிர்வரும் திங்கட்கிழமை (4) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அவர்களின் வங்கிக்கணக்கு தரவுகள் சரியாகக் காணப்படுகின்றனவா என பரிசீலிக்கும் நடவடிக்கை இன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.

தற்போது 08 இலட்சம் பயனாளிகளுக்கான அஸ்வெசும முதற்கட்ட கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும திட்டம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கையும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே, அஸ்வெசும திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மேலும் சில பயனாளர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதி இன்று முதல் வங்கிகளுக்கு விடுவிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.