நாட்டின் சில மாவட்டங்களில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 3 மாவட்டங்களிலுள்ள 10 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, புலத்சிங்ஹல மற்றும் இங்கிரிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, புலத்கொஹூபிட்டிய, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலக பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட மற்றும் குருவிட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.