யாழ்.நெடுந்தீவு கடற்கரையில் 04 ஆமைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 35 ஆமைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி முதல் மேற்கு கடற்கரையில் 31 ஆமைகளின் உடல்கள் கரையொதுங்கின.
மேலும் 3 ஆமைகளின் ஓட்டில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கான சிகிச்சைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாகவே மேற்கு கடற்கரையில் கடலாமைகள் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
ஆமைகளின் உடல்களில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் இந்த விடயம் தெரியவந்தது.
இது தொடர்பான அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளுக்கு டைனமைட் எனப்படும் வெடிமருந்துகளை பயன்படுத்தியதன் காரணமாக கடலில் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அதன் காரணமாக ஆமைகள் உயிரிழந்திருக்கலாம் எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் சந்தேகிக்கின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.